புனித இசிதோர் முன்பள்ளியும் அதன் வளர்ச்சி பாதையும்

புனித ஞானப்பிரகாசியார் கத்தோலிக்க வாலிப கழகத்தால் ஆலய வளாகத்தில் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக ஒரு முன்பள்ளியினை 1975ம் ஆண்டு பங்குனி மாதம் வளர்மதி என்ற பெயருடன் ஆரம்பமானது. திருமதி அரியமலர் சூசைதாஸ் அவர்கள் ஆசிரியராக பணிபுரிந்தார் பெற்றோரின் ஒத்துழைப்பும் பிள்ளைகளின் வரவாலும் அதிகரித்து ஏழாலையில் சிறந்த முன்பள்ளியாக தொடர்ந்து செயற்பட்டுக்கொண்டு வருகின்றது. அப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண நிலமை மற்றும் இடப்பெயர்வு காரணமாக 1990ம்ஆண்டில் செயலிழந்தது.1998ம் ஆண்டிற்கு பின்னர் திருமதி அரியமலர் சூசைதாஸ் அவர்களால் அவரின் வீட்டில் சிறிது காலம் இயங்கியது. மீண்டும் செயலிழந்த நிலையில் காணப்பட்டது.
அருட்தந்தை கான்போவர் காலத்தில் இயங்கிய இளையோரின் பாரிய முயற்சியால் முன்பள்ளி 2006 ம் ஆண்டு புனித இசிதோர் முன்பள்ளி ஏன்ற பெயருடன் புனித ஞானப்பிரகாசியார் கலையரங்கு கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கும் போது எந்த தளபாட வசதியின்றி பிள்ளைகள் நிலத்தில் இருந்து படித்தார்கள். எமது இளையோர்கழகத்தின் போசகராக திரு. ஊ.யு.து தயாபரன் அவர்கள் இளையோர்களை சிறப்பாக வழி நடத்தி முன்னேற்றப்பாதைக்கு அடித்தளமிட்டார். பின்னர் அவரின் முயற்சியாலும் ஏழாலையை சேர்ந்த திரு. கி.அருள்ஞானம் அவர்களின் முன்னேடுப்பால் புலம்பெயர்ந்த சர்வதேச நிறுவனத்தின் அன்பளிப்பால் ரூபா 600,000.00 பெறுமதியில் தண்ணீர் தாங்கி மலசலகூடம் தளபாடங்கள் என்பன பெறப்பட்டது.
காலங்கள் உருண்டோடிக்கொண்டிருக்க பிள்ளைகளின் வரவுகளும் அதிகரிக்க இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். மேலும் முன்பள்ளிக்கான கட்டடம் அமைக்க வேண்டிய தேவையும் தொடர்ந்து செல்ல திரு. கனகரத்தினம் உமாகாந்தன் அவர்களால் ஆலயத்தின் அருகாமையில் இருந்த காணியை கொள்வனவு செய்து கொடுத்தார். பின்னர் கட்டடம் அமைப்பதற்கான நிதியினை ரூபா 1,500,000.00வை பாரளமன்ற உறுப்பினர் திரு.த.சித்தார்த்தன் வழங்கியிருந்தார்.அருட்தந்தை பேனாட் றெக்னே அவர்களால் அத்திவாரம் இடப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டு கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.
கட்டடத்தை கட்டிமுடிக்க நிதி போதமையால் பழையமாணவர்களிடம் இருந்தும் நலன்விரும்பிகளிடமிருந்தும் பெறப்பட்டு கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டு 2020ம் ஆண்டு தைமாதம் அருட்தச்தை பேனாட் றெக்னே அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்தும் அபிவிருத்தி பாதையில் பல வளர்ச்சிகளை கண்டுகொண்டிருக்கின்றது. அது மட்டுமல்லாது கல்வி வளர்ச்சியில் பிள்ளைகள் பல போட்டிகளில் பல வெற்றிகளை பெற்று வருகின்றனர். அத்துடன் கலாசார விழா , விளையாட்டுப்போட்டி ஒளிவிழா கண்காட்சி என்று பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தொடர்ந்தும் புனித இசிதோர் நாமத்தில் ஆரம்பிக்கப்பட்ட முன்பள்ளி பல சாதனையாளர்களை உருவாக்கி கிராமத்திற்கு பெயர்சேர்க்க புனித இசிதேர் நிறைவாக ஆசீர்வதிக்கின்றார்.