அபிவிருத்தி பணிகள்
எமது புனித இசிதோர் ஆலயம் விசுவாச வாழ்வில் 120 வருடங்களை கடந்துவருகின்ற இந்த நிலையில் எமது ஆலய அபிவிருத்தி தொடர்பான பதிவுகளை 2005 பிற்பட்ட காலத்திலிருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். முற்பட்ட காலம் தொடர்பானபதிவுகள் ஒளிப்படங்களை எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் பதிவேற்றிக்கொள்ள முடடியும்.
• 2005ம் ஆண்டு நூற்றாண்டு விழாவும் ,மலர்வெளியீடும் ,நூற்றாண்டு விழா நினைவு சுருவம் திறந்துவைக்கப்பட்டது.பு னித ஞானப்பிரகாசிரியார் கலையரங்கு மீள்புனர்நிர்மானம் செய்யப்பட்டது.
• 2006ம் ஆண்டுஆலயவளகத்திற்குள் புனித இசிதோர்முன்பள்ளி என்ற பெயருடன் மீள ஆரம்பிக்கப்பட்டது.
• 2008ம் ஆண்டு IOM நிறுவனத்தின் உதவியுடன் தண்ணீர்த்தாங்கி,மலசலகூடம்முன்பள்ளி
தளபாடம் பெறப்பட்டது.
• 2012 ம்ஆண்டு இருந்து 2015 ம் ஆண்டுக்குள் சேமக்காலை சுற்றுமதில் கட்டுவதற்கு பங்குமக்கள் மற்றும் புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பில் நிறைவு செய்யப்பட்டது..
• 2015ம் ஆண்டு திருப்பண்ட அறையின் பிற்பகுதி மீள சீமெந்து பூசப்பட்டது.
• 2016ம்ஆண்டு நடுக்கோவில் கூரை திருத்தப்பட்டது.
• 2017ம் ஆண்டு மணிக்கோபுரம் திரு.சவுந்தரநாயம் அவர்களின் குடும்பம் சார்பாக அவர்களது
பிள்ளைகளின் அன்பளிப்பில் கட்டப்பட்டது.
• 2017 ம் ஆண்டு நடுக்கோவில் நிலம் மீளஅமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.
• 2018ம் ஆண்டு புனித இசிதோர் முன்பள்ளிக்கான காணி கலாநிதி க.உமாகாந்தன் அவர்களால்
கொள்வனவு செய்யப்பட்டு அன்பளிப்பாக பெறப்பட்டது.
• முன்பள்ளிக்கான கட்டிடத்துக்கு பாரளமன்ற உறுப்பினர் திரு. அ.சித்தார்த்தரின் ஒதுக்கீட்டில்
1.2மில்லியன் பெறப்பட்டு கட்டப்பட்டது. எமது வேண்டுகோளிற்கு இனங்கி முன்பள்ளிக்கு
மேலும் அபிவிருத்தி செய்ய ரூபா 300000.00 அன்பளிப்பு செய்யப்பட்டது. புங்குமக்களிடமிருந்து
210340.00ரூபாவும் பழையமாணவர்களிடமிருந்து 137000.00 ரூபாவும் பெறப்பட்டு வேலைகள்
ஓரளவு பூர்த்தி செய்து ஆரம்பிக்கப்பட்டு இயங்கிகொண்டிருக்கின்றது.
• பிரான்ஸில் வாழ்வும் எம் உறவுகளால் வருடாந்தம் திருவிழா கொண்டாடப்பட்டு உறவுகளிடமிருந்து சேகரிக்கப்படும் பணம் வருடாந்தம் தொடர்ச்சியாக ஆலய அபிவிருத்திப்பணிக்காக அனுப்பி வைக்கப்படுகின்றது.
• 2020 ம் ஆண்டு எமது ஆலய புலம் பெயர் உறவுகளின் அன்பளிப்பி பங்குபணிமனை மீள புனரமைக்கப்படுகின்றது.
• 2024ம் ஆண்டு ஆலய திருப்பீட கூரை வேலைகள் மீள புனரமைக்கப்பட்டது.
• இதனை விட பலர் பொருட்களாக கொள்வனவு செய்துதந்துள்ளனர் அது மட்டுமல்லாது பல செயற்பாடுகளை செய்துள்ளார்கள். அவர்களை இந்த இடத்தில் நினைக்கின்றோம்