Untitled-1

திருமறை வளர்ச்சியில் ஏழாலை

யாழ்ப்பாண மாவட்டத்தில் நில வளமும், நீர் வளமும் அமைந்த வலிகாம் பிரதேசத்தில் புனிதர் யோசவ்வாஸ் சில்லாலையில் கால் பதித்த வரலாறும், தவத்திருதோமஸ் அடிகளாரின் தோலகட்டி செபமாலைதாசர் சபையில் வரலாறும் தவத்திரு தோமஸ் அடிகளாரின் தோலகட்டி செபமாலைதாசர் சபையின் வரலாறும் யாழ் திருமறை வரலாற்றில் பிரதான இடத்தைப்பிடித்து விட்டன. ஏழாலையின் இரண்டு பக்கத்திலும் பண்டத்தரிப்பு பற்றிமாபதியும் , புனித சூசையப்பர் சபையாலும் திருக்குடும்பக் கன்னியர் சபையாலும் வளமாக்கப்பட்ட இளவாலை மற்றும் போர்த்துக்கேய ஆட்சிக்காலத்தில் திருமறையில் இணைந்த கோப்பாய் அச்சுவேலி ஆகிய கிராமங்களுக்கு நடுவே சைவமும் தமிழும் செழித்தோங்கிய ஏழாலை கிராமத்தில் வாழந்த எமது முன்னோர் கிறிஸ்துவை அறிந்து திருமுழுக்கு பெற்றமை தனித்துவமானது இயற்கையளித்த செம்மணிணில் பயிர்செய்து பாலுக்காக பசுவை வளர்த்து பாங்காக வாழ்ந்த எம் முன்னோர் கமத்தொழிலின் பாதுகாவலர் புனித இசிதோருக்கு கிராமத்தின் நட்ட நடுவே ஆலயத்தை அமைத்து இறைவனைப் போற்றிய நூற்றிருபது ஆண்டு இறை மீட்பின் இரகசியத்தை பறைசாற்றுகின்றது.

புதுமைகள் புரியும் புனித இசிதோர்

புனித இசிதோர் ஸ்பெயின் நாட்டிலே மட்றிட் நகருக்கண்மையிலுள்ள ஓர் ஊரில் 1070ம் ஆண்டளவில் பிறந்தார். இவரது பெற்றோர் ஏழைக் குடியானவர்கள். ஆனால் மிகுந்த பக்தி விசுவாசமுடையவர்கள். இசிதோரின் இளமைப் பருவத்திலேயே இறைவனை அன்பு செய்யவும், பாவத்தை வெறுக்கவும் அவருக்கு கற்றுக் கொடுத்தனர். ஏட்டுக்கல்வி பெற அவருக்கு வாய்ப்பு இருக்கவில்லை. தூய ஆவியின் அருளினாலேயே அவர் இறைஞானத்தைப் பெற்றுக்கொண்டார்.

அவரது பெற்றோர் இளவயதிலேயே அவரை ஜோண் டி வேர்காஸ் (John De Vergas) என்னும் பணக்காரப் பண்ணையாரிடம் கூலி வேலைக்குச் சேர்த்துவிட்டனர். தமது வாழ்நாள் முழுவதும் அவர் கூலி வேலையிலேயே நிலைத்திருந்தார்.

அறிவித்தல்

அருட்பணிச்சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

அன்பான உறவுகளுக்கு கடந்த 26-1-2025 நடந்த அருட்பணிச்சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றோம் அருட்பணிச்சபை புனித இசிதோர் ஆலயம் ஏழாலை

மேலும் அறிய »

எங்கள் நோக்கம்

பரிசுத்த ஆவியினால் ஈர்க்கப்பட்டு, திருவருட்சாதனங்கள் மூலம் கிறிஸ்துவால் வளர்க்கப்பட்டு, புனித இசிதோரின் பங்கு சமூகமாகிய நாங்கள், எல்லா மக்களுக்கும் கடவுளின் அன்பைப் பறைசாற்றும் போது, கடவுளுடனும் ஏனையவர்களுடனும் எங்கள் உறவை வளர்த்து ஆழப்படுத்த முயற்சிக்கின்றோம். நிகழ்கால மற்றும் வருங்கால சந்ததியினருக்கான சேவையில், கடவுள் நமக்கு அளித்துள்ள வல்லமைகளை கண்டறிந்து அவற்றைக் பகிர்ந்து கொள்ள நாங்கள் ஒருவரையொருவர் ஊக்குவிக்கிறோம்.